Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all 170 articles
Browse latest View live

ஞானத்தேடல் - Episode 10 - அறம் பாடுதல்

$
0
0

 


அறம் பாடுதல்

 நம் புலவர்கள்  சிலரின் தனித்துவம் அல்லது சக்தி என்னவென்றால் அவர்கள் அறம் பாடும் வல்லமை. அப்படி பாடும் வல்லமையினால் பாடும் உண்மை அப்படியே நடந்துவிடும் அந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இதில் நாம் பார்க்கவிருப்பது ஔவையார் பாடிய சங்கிலி அறுத்த பாடல்.   

Power of Aram

Among our poets a few of them had special powers or capability which is singing Aram (Truths). If they sing those Arams, events would happen as described in their poem, confirming the truth. Let's explore those interesting situations. We will see about the songs Avvaiyar sang to break the chains.


ஞானத்தேடல் - Episode 11 - ஊர்களின் பெயர்கள்

$
0
0

 


ஊர்களின் பெயர்கள்

 நம் ஊர்களின் பெயர்கள் சில சுவையான பின்னனி  கொண்டவை. சில காப்பியங்களுடனும், இதிகாசங்களுடனும் தொடர்பு உடையன என்பது ஆச்சரியதிற்குறிய செய்தி. அப்படிபட்ட சில ஊர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 

Names of our places

Many of our places are associated with interesting stories. They are related to the great epics and literature, it is surprising to learn about those interesting information about those places. Let's explore some of them here...

ஞானத்தேடல் - Episode 12 - ஊர்களின் பெயர்கள்

$
0
0

 


ஊர்களின் பெயர்கள்

 நம் ஊர்களின் பெயர்கள் சில சுவையான பின்னனி  கொண்டவை. சில காப்பியங்களுடனும், இதிகாசங்களுடனும் தொடர்பு உடையன என்பது ஆச்சரியதிற்குறிய செய்தி. அப்படிபட்ட சில ஊர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 

Names of our places

Many of our places are associated with interesting stories. They are related to the great epics and literature, it is surprising to learn about those interesting information about those places. Let's explore some of them here...

ஞானத்தேடல் - Episode 13 - நீரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

$
0
0

 


நீரோட்டகம் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது. இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்டக வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....


Neerotagam - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Neerotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. Works like these enrich the Tamil language. In this episode let's explore Neerotagam...

References

தண்டியலங்காரம் - Thandialangaaram

திருச்செந்தில் நீரோட்டக யமக அந்தாதி - Thiru Senthil Neerotaga Yamaga Andhaadhi

ஞானத்தேடல் - Episode 14 - இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு

$
0
0

 


இலக்கியத்தில் துன்பங்களுக்கு தீர்வு


மனித வாழ்வில் வரும் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பலர் பல பாடல்கள் மூலம் தீர்வுகள்  மற்றும் அறிவுரைகள் கூறி உள்ளார்கள்.  திருக்குறள் முதல் பல நூல்களில் இதற்கு வழிகள் கூறப்பட்டுள்ளது அதில் கதை உதாரணத்துடன் .சொல்வது விவேக சிந்தாமணி. அதை இந்த பதிவில் பார்ப்போம்... 


Solutions to problems in Tamil literature 

Tamil literature has numerous works that provide solutions to problems faced by humans in their life. Right from Thirukkural a lot of works provide different solutions. Of which, Viveka Chinthamani provides with a small story like illustration. Let's explore it in this episode...

ஞானத்தேடல் - Episode 15 - நிரோட்டக யமக அந்தாதி (Gnanathedal)

$
0
0


 நிரோட்டக யமக அந்தாதி் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நீரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  இதில் யமகம் என்னும் அமைப்பு ஒரே சொல் வேறு வேறு பொருளுடன் வருவது. மேலும் அந்தாதி என்பது முதல் பாடலின் இறுதி சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வருவது.  இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நிரோட்டக யமக அந்தாதி  வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....

Nirotaga Yamaga Andhaadhi - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. Adding to the complexity is the Yamagam form, in which the same word repeats in each line giving a different meaning. Andhaadhi is a form where the last word of the first song becomes the first word of the next song. Works like these enrich the Tamil language. In this episode let's explore Nirotagam...

References

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே

யானைக்கண்‌ தங்கு அரி சென்று ஏத்‌து எழில்‌ செந்தில்‌, இன்று அடைந்தே
யான்‌ ஐ கண்டம்‌ கரியற்கு, அம்‌ கயிலையை ஏய்ந்த தகை
ஆன் ‌ஐக்கு அண்டம் கரிசேர்‌ எண்‌ திக்கு ஆக்கினர்க்கு ஈ நல் இசை
யானைக்  கண்டு அங்கு அரிதாக சீர்க்கதி எய்‌தினனே

ஞானத்தேடல் - Episode 16 - யாருக்கு கடன் (கடமை) (Gnanathedal)

$
0
0


யாருக்கு கடன் (கடமை) 

ஒருவர் பிறந்து வளரும்போது அவரை வளர்க்க பலருக்கு கடமை உண்டு. ஆப்படி யார் யாருக்கு என்ன என்ன கடமை என்பதை புரநானூற்று பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆது இன்றும் பல சந்தர்ப்பங்களில் பல இடத்திலும் பொருத்தமாக இருப்பது பெரும் வியப்பே. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... 

Whose responsibility?

Many people take responsibility in raising a child from childhood to adulthood. A song in Puranaanooru describes who has what responsibilities in raising a child. It is amazing to see that the message in the song applies to other situations and places as well. Let's explore that in this episode...

 

ஞானத்தேடல் - Episode 17 - நிரோட்டகம் - அநாசிக இதழகல்

$
0
0


 நிரோட்டகம் - அநாசிக இதழகல் - உதடுகள் ஒட்டாத பாடல்கள்

தமிழ் இலக்கியங்களில் பல விந்தையான ஆச்சரியமூட்டும் படைப்புகள் உள்ளன.  அவற்றில் நாம் முன்னே பார்த்தது ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாராகவி  என்பன. அதில் நிரோட்டகம் என்பது ஒரு சித்திரகவி வகை சார்ந்த பாடல். இதற்கு இதழகல் என்ற பெயரும் உண்டு. இந்த பாடல் வகையில் சுவையான விஷயம் என்னவென்றால் இந்த பாடல்கள் பாடும்போது உதடுகள் ஒட்டாது.  அநாசிக எழுத்துக்கள்: க, ச, ட, த, ப, ற, ய, ர, ல, வ, ள, ழ,  ஆகியவை. 

பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள். 

கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.   

இந்த அநாசிக எழுத்துக்களை கொண்டு ஒரு இதழகல் பாடல் பாடுவது என்பது மிக கடினமான ஒன்று. அதை மாம்பழ கவிச்சிங்க நாவலர்  பத்து நிமிடத்தில் பாடினார் என்பது மேலும் ஆச்சரியமூட்டும் செய்தி. 

இப்படிபட்ட அருமையான படைப்புகள் தமிழ் மொழியை மேலும் செழுமை படுத்துகின்றன. இப்பதிவில் அந்த நீரோட்ட யமக அந்தாதி  வகை பாடல்களைப் பற்றி பார்ப்போம்....

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 

Nirotagam Anaasiga Idhazhagal - Songs in which the lips don't meet

Tamil literature has amazing works that blow our minds. We have already come across those - Aasukavi, Madhurakavi, Chiththirakavi and Viththaara kavi. Of which Nirotagam is a part of Chiththira Kavi in which the lips don't meet when one sings those songs. It is also called as Idhazhagal. 

Tamil language has nasals and non-nasals in its alphabets. Singing a poem that is an Idhazhagal, that too using only the non-nasals is an amazing task. The poet Mambazha Kavichchinga Naavalar wrote such a poem in 10 minutes.

Works like these enrich the Tamil language. In this episode let's explore that Nirotagam...


ஞானத்தேடல் - Episode 18 - தங்கப்புதையல் ரகசியம் (Gnanathedal)

$
0
0


தங்கப்புதையல் ரகசியம்

யமாஷீட்டாவின் தங்கப்புதையல் பற்றிய செய்தி  உலகில் மிக பிரபலமாக உலா வந்தது. அதை இன்றும் தேடுவோர் உண்டு. அதுபோல தமிழ் நாட்டில் ஒரு புத்தல் ரகசியம் உண்டு, அதற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு. அது என்ன? வாருங்கள் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

A puzzle about a gold treasure

Yamashita's gold was popular in the news for a very long time. Still people are searching for it. Like Yamashita's gold there is an unsolved riddle that mentions about a gold treasure in Tamil Nadu. There is a story behind that treasure. Let's explore that in this episode...

ஞானத்தேடல் - Episode 19 - தொல்காப்பியத்தில் ஆறு அறிவு (Gnanathedal)

$
0
0


 தொல்காப்பியத்தில் ஆறு அறிவு

மனிதர்களுக்கு ஆறு அறிவு என்பதை தொல்காப்பியர் தனது படைப்பான தொல்காப்பியத்தில் வகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு அறிவு உயிரினத்திற்கும் உதாரணங்களோடு  குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமூட்டுவது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Six Senses in Tholkappiyam

Humans have six senses and this was described by Tholkaappiyar in detail in his work Tholkaappiyam. He not only describes those senses but also provides examples of species with those number of senses, which is fascinating piece of information. Let's explore that in this episode...

References

தொல்காப்பியம் -  Tholkaappiyam

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)

$
0
0


சாபத்தின் வலிமை 

பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Power of Curse

Let's explore the power of curse in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural


ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில்  மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

ஞானத்தேடல் - Ep 21 - உடல்நலம் உயிர்நலம் (Gnanathedal)

$
0
0


 உடல்நலம் உயிர்நலம் 

உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று  இப்பதிவில் பார்ப்போம்...  

Wealth called health 

Let's explore the what Tamil literature talks about health in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural

சித்தர் பாடல்கள் - Siddhar Songs


காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா

காயமே இது மெய்யடா
அதில் கண்ணும் கருத்தும் வையடா

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே


ஞானத்தேடல் - Ep 22 - குருவின் பெருமை (Gnanathedal)

$
0
0


குருவின் பெருமை

ஒருவருக்கு குரு (ஆசான்) என்பவரின் முக்கியத்துவம்  பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று  இப்பதிவில் பார்ப்போம்...  

The importance of Guru 

Let's explore the what Tamil literature talks about the importance of Guru (Teacher) in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

தொல்காப்பியம் - Tholkaappiyam

ஔவையார் குறள்மூலம்  - Avvaiyar Kural Moolam

கந்தர் அநுபூதி  - Kandhar Anuboothi

திருக்குறள் - Thirukkural

சித்தர் பாடல்கள் - Siddhar Songs

குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. 

குரு என்றால் ஒளி

'குரு'என்ற சொல் 'ஒளி'என்றும் பொருள்படும். 

அதனால் தான் கண்களில் ஒளியிழந்தவனைக் 'குருடன்'என்கிறோம். 

வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான்.

ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம்.

குரு என்றால் செம்மை

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே
 - தொல்காப்பியம் 2-8-5

இரத்தத்தைக் "குருதி"என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். 

குரு என்றால் முளைப்பு

வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் "குருத்து"என்று சொல்வது அதன் முளைப்பை வைத்து. 

எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. 

குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே 
- திருமந்திரம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
- திருமந்திரம்

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்
- ஔவையார் குறள்மூலம்

தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்
- ஔவையார் குறள்மூலம்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
- கந்தர் அநுபூதி

ஞானத்தேடல் - Ep 23 - மழையின் மகத்துவம் (Gnanathedal)

$
0
0


மழையின் மகத்துவம்

பழங்காலம் தொட்டு மக்களின் வாழ்வில் மழையின் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் Rain and its importance Since the old times, rain has played an essential role in human's life. Let's explore about that in this episode... References திருக்குறள் - Thirukkural விவேக சிந்தாமணி - Viveka Chinthamani ஔவையார் மூதுரை - Avvaiyar Moothurai துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்குமாம் பெய்யும் மழை வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-exploredKindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-iiKindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6#ஞானத்தேடல்#மழை#திருவள்ளுவர்#திருக்குறள்#ஔவையார்#மூதுரை#விவேகசிந்தாமணி#தமிழ்#ஞானம்#Knowledge#Quest#Gnanathedal#Rain#Thiruvalluvar#Thirukkural#Avvaiyar#Moothurai#Tamil

ஞானத்தேடல் - Ep 24 - புலவர்கள் போட்டி - 1 (Gnanathedal)

$
0
0


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References விநோத ரசமஞ்சரி - Vinodha Rasamanjari ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோ டிறங்குஞ் சோணாடா! கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா! பிள்ளை மதிகண் டிப்பேதை பெரிய மதியு மிழந்தாளே! ஒட்டா மதி கெட்டாய் பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர் தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா! கொங்கர்க் கமரா பதியளித்த கோவே! ராச குலதிலகா! வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே செம்மான் கரத்தனருள் சேயா! நெடியோனை அம்மானெனப் பெற்ற வருள்வேலா - இம்மான் கரும்பிறைக்கும் வெண்பிறைக்குங் கண்ணம் பிறைக்கும் அரும்பிறைக்குங் கூந்த லணை

ஞானத்தேடல் - Ep 25 - பழமொழிகள் (Gnanathedal)

$
0
0


பழமொழிகள்

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் என்னும் முதுமொழிகள், இலக்கியத்தில் அவற்றின் பங்கு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Proverbs/Adages Proverbs/Adages are quite prevalent since the old times and in Tamil literature. Let's explore it in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam அகநானூறு - Aganaanooru தேவாரம் - Thevaaram ஔவையார் நல்வழி - Avvaiyar Nallvazhi அபிராமி அம்மை பதிகம் - Abirami Ammai Padhigam பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் - Thirumangai Azhwar Siriya Thirumadal திருக்குறள் - Thirukkural தொல்காப்பியர், நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி” அகநானூறு நன்று செய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் பழமொழிப் பதிகம் திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி வருமாறு அமைந்துள்ளது. நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது.  (1) மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த  மேனியான் தாள்தொ ழாதே உய்யலாம்  மென்றெண்ணி உறிதூக்கி   உழிதந்தென் உள்ளம்விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ   மயில் ஆலும் ஆரூ ரரைக் கையினால் தொழாதுஒழிந்து கனியிருக்கக்      காய்கவர்ந்தகள்வ னேனே.    இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100) (2) என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு  என்னையோர்  உருவம்  ஆக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு    என்னுள்ளம்  கோயி லாக்கி அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு    அருள்செய்த ஆரூ ரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்   காக்கைப்பின் போன வாறே.    காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு ஆராவமுதமண்கய்தி – அதில்நின்றும் வாரதொழிவதன்னுண்டு – அதுநிற்க ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே - திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் முயல் விட்டுக் காக்கை தினல் - பழமொழி நானூறு நீற்றிடைத் திகழும் நித்தனை, முத்தனை, வாக்கும் மனமும் இறந்த மறையனை, பூக்கமழ் சடையனை, புண்ணிய நாதனை, இனைய தன்மையன் என்று அறிவு அரியவன் தனை, முன் விட்டுத் தாம் மற்று நினைப்போர், மாமுயல் விட்டுக் காக்கைப் பின்போம் கலவர் போலவும் விளக்கங் கிருக்க மின்மினி கவரும் அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும் - நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம்) (3) பெருகுவித்து என்பாவத்தைப்பண்டெலாம்  குண்டர்கள்தம்  சொல்லே கேட்டு உருகுவித்து என் உள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூ ரர்தம் அருகிருக்கும் விதியின்றி அறம் இருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே.  (4) குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார் நகைநாணாது உழிதர் வேனைப்  பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில்  தெளித்துத்தன் பாதம்காட்டித்  தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல்  அருள்செய்யும் ஆரூரரைப் பண்டெலாம் அறியாதே பனிநீரால்  பாவைசெயப் பாவித் தேனே   (5) துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்  சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு என்னாகத் திரி தந்து ஈங்கு  இருகையேற்று   இடஉண்ட ஏழை யேனான் பொன்னாகத்து  அடியேனைப் புகப்பெய்து  பொருட்  படுத்த ஆரூ ரரை என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு   ஆதனாய்  அகப்பட் டேனே.  (6) பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொரு  தலையோடே திரிதர் வேனை ஒப்போட ஓதுவித்துஎன் உ ள்ளத்தின்   உள்ளிருந்து அங்கு  உறுதி காட்டி அப்போதைக்கு  அப்போதும்  அடியவர்கட்கு     ஆரமுதாம்  ஆரூ ரரை எப்போதும் நினையாதே இருட்டறையின்   மலடு கறந்து  எய்த்த வாறே.  (7) கதியொன்றும்  அறியாதே கண்ணழலத்  தலைபறித்துக் கையில்  உண்டு பதியொன்று நெடுவீதிப் பலர்காண  நகைநாணாது  உழிதர் வேற்கு மதிதந்த ஆரூரில் வார்தேனை   வாய்மடுத்துப் பருகி உய்யும் விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்க   மின்மினித்தீக் காய்ந்த வாறே.   (8) ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்   ஓரம்பின் வாயில் வீழக் கட்டானைக் காமனையும்  காலனையும்   கண்ணினெடு காலின் வீழ அட்டானை  ஆரூரில்  அம்மானை   ஆர்வச்செற் றக்கு ரோதம் தட்டானைச் சாராதே தவமிருக்க   அவஞ்செய்து தருக்கி னேனே.  (9) மறுத்தான் ஓர் வல்லரக்கன்  ஈரைந்து  முடியினொடு தோளும்  தாளும் இறுத்தானை  எழின்முளரித் தவிசின்மிசை இருந்தான்றன் தலையில்  ஒன்றை அறுத்தானை ஆரூரில்  அம்மானை  ஆலாலம்  உண்டு கண்டம் கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க  இரும்புகடித்து எய்த்த வாறே. அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய்

ஞானத்தேடல் - Ep 26 - அர்த்தம் மாறிய பழமொழிகள் (Gnanathedal)

$
0
0


அர்த்தம் மாறிய பழமொழிகள் 

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். அந்த பழமொழிகள் காலப்போக்கில் தங்கள் அர்த்தம் மாறி வேறு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றை  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Proverbs/Adages that changed in meaning

Proverbs/Adages are quite prevalent since the old times and in Tamil literature. Some of them got their meanings changed over time. Let's explore those in this episode...

ஞானத்தேடல் - Ep 27 - புலவர்கள் போட்டி - 2 (Gnanathedal)

$
0
0

 


புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ! எட்டேகால் லட்சணமே! எமனே றும்பரியே! மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற் கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே! ஆரையடா சொன்னா யடா

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)

$
0
0


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன் கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா இருந்தேனுக் கெங்கே யிடம். விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும் வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது. சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி

ஞானத்தேடல் - Ep 29 - விதி பற்றி இலக்கியங்கள் (Gnanathedal)

$
0
0


 

விதி பற்றி இலக்கியங்கள்

விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate - What literature says Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai திருக்குறள் - Thirukkural வில்லிபாரதம் - Villibharatham சிலப்பதிகாரம் - Silappadhikaaram பாரதியார் பாடல்கள் - Bharathiar Paadalgal அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம் நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம் அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே? நரி வகுத்த வரையினிலே தெரிந்து சிங்கம் தழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழது உஞற்று பவர் (620) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (380) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377) மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’
Viewing all 170 articles
Browse latest View live