Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal)

$
0
0


 திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம்


அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே

- அப்பர் தேவாரம் (5.100.7)


கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற்

பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்

- சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5)


'கிளிவிருத்தம்''எலிவிருத்தம்'என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது.


'வீரசோழியத்தின்'உரை ஆசியர் 'பெருந்தேவனார்'இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி விருத்தம்'என்பன 'விருத்தங்கள்'என குறித்துள்ளார். 


இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது.


கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளாம்

இருதலைப் புற்றி னாக மின்றுணு மிரையா மென்று

விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி

நரியினார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே

- விவேக சிந்தாமணி


முதல் 9 பாடல்களில் (2-10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு.


ஓர் வேடன் தன் புலத்தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்'எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.


குடற்படு முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர்

கடற்படை யியக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும்

திடற்பகை இன்மையாலே செவிகொய்வான் வால்கொய்வானாய்

உடல்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான்  (11)


அஞ்சு மின்னதி லோபமில் லோர்களுஞ்

செஞ்சு டர்நெடு வேற்றிரி யோதனன்

பஞ்ச வர்க்குமண் பாகங் கொடாமலே

துஞ்சி னான்கிளை தன்னொடு மென்பவே (22)


குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை

ஒட்ட லன்புன லுய்த்தவக் காகுத்தன்

திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன்

பட்ட தெய்துவ பற்றுளத் தார்களே (23)


Viewing all articles
Browse latest Browse all 170

Trending Articles