Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep89 - கொடுந்தமிழ் நாடு - (Gnanathedal)

$
0
0


 கொடுந்தமிழ் நாடு


இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

(தொல்.சொல், 397)


செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி


கொடுந்தமிழ் நாடு


கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.


"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,

பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய

சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிருநாட் டெண்"


என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க.


கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல் லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணந் துளுவம் குடகங் குன்றகம் என்பன குடபால் இருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும் ' (தொல், சொல், தெய்வச்சிலையார் உரை , பக். 218 and 219)


பன்னிரு நிலமாவன- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றமுகம் கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.


தமிழ்சூழ் பதினேழ் நிலம்


சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக்,குடகம்

கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,

கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே


கொடுந்தமிழ் நாடு


தற்காலப் பெயர்


தென்பாண்டி நாடு - திருநெல்வேலிப் பகுதி

குட்ட நாடு - கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்

குட நாடு - வடமலபார்

கற்கா நாடு - குடகு நாடு

வேணாடு - திருவாங்கூரின் தென்பகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) - வேளிர் நாடு ⇒ வேள் நாடு ⇒ வேணாடு,  வேழ நாடு ⇒ வேணாடு.

பூழி நாடு - கோழிக்கோடு

பன்றி நாடு - பழனி மலை சூழ்ந்த பகுதி

அருவா நாடு -  அருவாளர் நாடு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு

அருவா வடதலை நாடு - சித்தூர், நெல்லூர்

சீத நாடு - கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள், நீலகிரி

மலையமான் நாடு - திருக்கோவிலூர் சூழ்ந்த பகுதி

புனல் நாடு - சோழ நாடு


Viewing all articles
Browse latest Browse all 170

Trending Articles